பிரான்ஸ் பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வருகிறது: ஜனாதிபதி மேக்ரான் விளக்கம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
486Shares

பிரான்சில் பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வருகிறது என்பது குறித்த தகவல்களை விவரமாக விளக்கியுள்ளார் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்.

பிரான்சில் மூன்று கட்டங்களாக பொது முடக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று கூறியுள்ள மேக்ரான், திகதி வாரியாக விளக்கமாக அது குறித்து விவரித்துள்ளார்.

இந்த பொது முடக்கம் சனிக்கிழமை முதல் தொடங்க இருக்கிறது.

பிரான்சில் நாளொன்றிற்கு புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை 60,000இலிருந்து 20,000ஆக குறைந்துள்ளது. ஞாயிறுக்கும் திங்களுக்கும் இடையிலான 24 மணி நேரத்தில் 4,452 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த திகதிகளில் என்னென்ன விடயங்கள் முடிவுக்கு வருகின்றன என்பது இன்றிரவு அறிவிக்கப்படும். அதன்படி,

நவம்பர் 28 சனிக்கிழமை என்னென்ன கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படுகின்றன?

மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து 20 கிலோமீற்றர் தொலைவுக்கு, மூன்று மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வதற்காக வெளியே செல்லலாம்.

அனைத்து கடைகளும் வீடு தொடர்பான சேவைகளும் இரவு 9 மணி வரை இயங்கலாம், ஆனால் சுகாதார கட்டுப்பாடுகளுடன்... ஆராதனைகள் நடத்தலாம், அதிகபட்சம் 30 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி. பள்ளிகளில் விளையாட்டு முதலானவற்றிற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

விதி விலக்கு சன்றிதழ்கள் முறை தொடர்ந்து அமுலில் இருக்கும். வீடுகளிலிருந்து வேலை செய்தல் தொடர்பான விதிகள் தொடரும்.

டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை,

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,000க்கு கீழே தொடரும் நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 2,500 முதல் 3,000 மக்கள் வரை அனுமதிக்கப்படும் நிலை வரும்போது, பொது முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

பிரான்ஸ் முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும், ஆனால், டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31 ஆகிய இரு நாட்களிலும் மட்டும் ஊரடங்கு கிடையாது. இருந்தாலும் அதிக அளவில் குடும்பத்தினர் கூட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூர் பயணங்களுக்கு அனுமதி உண்டு. தியேட்டர்கள், அருங்கட்சியகங்கள் திறக்க அனுமதி.

ஜனவரி 20, புதன்கிழமை (கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5,000க்கு கீழேயே தொடர்ந்தால்)

உணவகங்கள், காபி ஷாப்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் மற்றும் விளையாட்டு அறைகள் திறக்கலாம், ஆனால், மதுபான விடுதிகள் மற்றும் இரவு விடுதிகளுக்கு அனுமதி இல்லை. பள்ளிகள் முழுமையாக இயங்கலாம். இரண்டு வாரங்களுக்குப்பிறகு பல்கலைக்கழகங்கள் இயங்கலாம்.

இவ்வளவு விடயங்களையும் விளக்கிய மேக்ரான், ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். கொரோனாவின் மூன்றாவது அலையை தவிர்ப்பதற்கான அனைத்தையும் செய்யவேண்டும் என மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூன்றாவது பொது முடக்கத்தை நாம் தவிர்க்கவேண்டுமானால், நாம் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும், வீடுகளுக்குள் இருக்கும்போது கூட, நம்முடன் வாழாத நண்பர்கள், உறவினர்கள் வரும்போது, மாஸ்க் அணிதல், முதலானவற்றை செய்து நமது அன்பிற்குரியவர்களை பாதுகாப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் மேக்ரான்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்