பிரான்சில் சிக்கிய சுவிஸ் கொள்ளையர்கள்: ஆக்‌ஷன் சினிமாவில் வருவதுபோல் கொள்ளையடிக்கும் கும்பல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
844Shares

பிரான்சில் 8 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் சுவிட்சர்லாந்திலும், அந்த கொள்ளையர்களின் கூட்டாளிகள் 5 பேர் சிக்கியுள்ள நிலையில், ஆக்‌ஷன் சினிமா பாணியில் அவர்கள் கொள்ளையடிப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் 2017க்கும் 2019க்கும் இடையில் தொடர்ச்சியாக ஒரு கொள்ளைக்கும்பல் கொள்ளையடித்துவந்தது. அவர்கள் கொள்ளையடிக்கும் விதம், ஆக்‌ஷன் சினிமாக்களில் வரும் காட்சி போல் இருக்கும்.

பணம் கொண்டு செல்லும் வாகனத்தை அந்த கொள்ளையர்கள் வழிமறிப்பார்கள், துப்பாக்கியைக் காட்டி வாகனத்தின் சாரதி மிரட்டப்படுவார், வாகனத்தின் கதவுகளில் சிறிய வெடிகுண்டுகளைப் பொருத்தி வாகனத்தின் கதவுகளைத் திறப்பார்கள்.

பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு, அந்த வாகனத்தை தீவைத்து எரித்துவிட்டு, அந்த கும்பல் பிரான்சுக்குள் தப்பியோடிவிடும்.

இந்த கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பாக, பிரெஞ்சு நகரமான Lyonஇலும், சுவிஸ் மாகாணமான Vaudஇலும், ஒருங்கிணைந்து பொலிசார் ரெய்டுகள் நடத்தினார்கள். ரெய்டுகளின்போது, Vaudஇல் 5 கொள்ளையர்களும், பிரான்சில் 8 கொள்ளையர்களுமாக மொத்தம் 13 பேர் சிக்கினார்கள்.

ஏற்கனவே, இதே கொள்ளைச்சம்பவங்கள் தொடர்பாக, La Sarraz என்ற இடத்தில் கடந்த மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்