கொரோனாவின் உச்சத்தை நாம் கடந்துவிட்டோம்: அறிவித்துள்ள நாடு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
928Shares

நாம் கொரோனாவின் உச்சத்தைக் கடந்துவிட்டோம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்சில் இரண்டாவது ஊரடங்கு தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Véran, பிரான்ஸ் கொரோனாவின் உச்சத்தை தாண்டி வந்துவிட்டது என தான் நம்புவதாகவும், நிலைமை மெதுவாக சீரடைய ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், நாம் இன்னமும் கொரோனா வைரஸை வென்றுவிடவில்லை என்று எச்சரித்துள்ள Olivier, வெற்றி பெற்றுவிட்டோம், இனி ரிலாக்ஸாக இருக்கலாம் என்று சொல்வதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்பதையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

ஊரடங்குக்கு நன்றி, மார்ச் மாதத்தில் இருந்த அளவுக்கு கொரோனா வைரஸ் குறைய ஆரம்பித்துள்ளது என்று கூறிய அவர், தொடர்ந்து 10 நாட்களாக புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்றார்.

நாளொன்றிற்கு 50,000 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளான நிலைமை மாறி, இப்போது கடந்த 24 மணி நேரத்தில் 27,228 பேர் மட்டுமே புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பிரான்சில் இரண்டாவது ஊரடங்கு தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில் கிடைத்துள்ள இந்த தகவல், மக்களை வீட்டுக்குள் முடக்கியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்பதையே காட்டுகிறது.

அத்துடன், மருத்துவமனைகளிலும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறையத் தொடக்கியுள்ளது. ஆனால், இத்தனை நல்ல விடயங்களுக்கும் மத்தியில் ஒரு சோகமான விடயத்தையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

அது என்னவென்றால், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை மட்டும் அதிகமாகவே உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், 302 பேர் பிரான்ஸ் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த வார நிலவரத்தைப் பார்த்தால், ஒரு வாரத்தில் சுமார் 4,000 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்