பிரான்சில் 2021 வரை அவசர நிலை நீட்டிப்பு? வெளியான முக்கிய தகவல்

Report Print Basu in பிரான்ஸ்
750Shares

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதி வரை கொரோனா அவசரகால நிலையை நீட்டிக்க பிரான்ஸ் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா உச்சத்தை எட்டிய போது பிரான்ஸ் அரசாங்கம் பொது சுகாதார அவசரகால நிலையை பிரகடனம் செய்தது.

கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், ஜூலை மாதம் பிரான்சில் அவசர நிலை நீக்கப்பட்டது.

தற்போது மறுபடியும் கொரோனா அதிகாரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த சமீபத்தில் மீண்டும் பிரான்சில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பிரான்சின் அரசாங்கம் தனது அவசரகால நிலையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 வரை நீட்டிக்க பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டின் பல பகுதிகள் ரெட்-அலர்ட் நிலைக்கு செல்கின்றன, அதாவது அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டால் கூறினார்.

பிரான்சின் மிகப்பெரிய நகரங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அவசரகால சுகாதார நிலையால் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால சுகாதார நிலை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதி வரை நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்