பிரான்ஸ் ஆசிரியர் படுகொலையைத் தொடர்ந்து இரண்டு இஸ்லாமிய பெண்களுக்கு கத்திக்குத்து: பாரீஸில் பரபரப்பு

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
1397Shares

பிரான்ஸ் ஆசிரியர் படுகொலையைத் தொடர்ந்து பாரீஸில் ஈபிள் கோபுரத்தின் கீழ் இஸ்லாமிய பெண்கள் இருவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் ஈபிள் கோபுரத்தின் கீழ் Kenza (49) மற்றும் Amel என்ற அல்ஜீரிய பின்னணி கொண்ட பிரான்ஸ் நாட்டவர்களான இரு பெண்கள் தங்கள் குடும்பத்தினருடன் நின்றுகொண்டிருந்தபோது, ஐரோப்பியர்கள் என கருதப்படும் இரு பெண்கள் அவர்களை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

Kenza என்ற பெண்ணுக்கு ஆறு குத்துகள் விழுந்துள்ளன, அவரது நுரையீரலில் துவாரம் ஏற்பட்டுள்ளது, Amel என்ற பெண்ணின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நடந்த சம்பவம் குறித்து Kenza கூறும்போது, நாங்கள் குடும்பமாக வாக்கிங் சென்று கொண்டிருந்தோம், ஈபிள் கோபுரத்தின் கீழ் இருளான ஒரு பகுதிக்கு சென்றபோது, இரண்டு நாய்கள் எங்களை நோக்கிவந்தன.

அந்த நாய்களின் உமையாளர்களிடம், பிள்ளைகள் பயப்படுகிறார்கள், உங்கள் நாய்களை பிடித்துக்கொள்ளமுடியுமா என்று கேட்டோம், அந்த பெண்கள் இருவரும் மறுக்க, வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், இன ரீதியாக எங்களை விமர்சித்த அந்த பெண்கள் இருவரும் கத்தியை எடுத்து எங்களை குத்தினார்கள் என்றார்.

சம்பவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களும், அந்த பெண்கள், அழுக்கான அரபியர்களே, உங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள் என அந்த பெண்கள் சத்தமிட்டவாறே தாக்கியதாக தெரிவித்துள்ளார்கள்.

அருகிலிருந்த கடைக்காரர்கள் கத்தியால் குத்திய ஒரு பெண்ணை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்க, சிறிது நேரத்திற்குப் பின் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பிரான்ஸ் ஆசிரியர் Samuel Paty (47) என்பவரை இஸ்லாமிய தீவிரவாதி ஒருவர் தலையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பிரான்சில் இஸ்லாமியர்களுக்கெதிரான வெறுப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்