பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மனைவி தனிமைப்படுத்தலில்...வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
257Shares

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் மனைவி பிரிஜித் மேக்ரோன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்ஸ் உள்ளது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நாட்டின் தலைநகர் பாரிஸ் உட்பட சில நகரங்களுக்கு இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தார்.

இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் மனைவி, Brigitte Macron(67) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஏனெனில், கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியதால் அவர், ஏழு நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.

ஆனால், நேற்று திங்கட்கிழமை வரை அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை, அதற்குரிய அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும், இதன் காரணமாக, நாளை புதன்கிழமை தலைநகர் பரிசில் இடம்பெற உள்ள பேராசியர் சாமுவேல் பற்றியின் தேசிய அஞ்சலி நிகழ்வில் இவர் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்