வித்தியாசமான ஒரு உணவை உண்ணும் பிரான்ஸ் நாட்டவர்கள்: அதிகம் வெளியே தெரியாத ஒரு தகவல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
919Shares

பிரான்ஸ் நாட்டவர்களை ஆங்கிலம் பேசும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தவளைகள் என்று அழைப்பார்களாம்... இந்த செய்தி தெரியுமா உங்களுக்கு? அதற்கு காரணம், பிரான்ஸ் நாட்டவர்கள் அதிகம் தவளைக் கால்களை உண்ணுவதுதான் என கூறப்படுகிறது.

பிரான்ஸ் மக்கள் ஆண்டொன்றிற்கு 4,000 டன் தவளைக்கால்களை உண்ணுகிறார்களாம். ஆனால், அவர்கள் சாப்பிடும் பெரும்பாலான தவளைக்கால்கள் வெளிநாடுகளிலிருந்துதான் வருகின்றனவாம். அதற்கு காரணம், தவளைகள் பிரான்சில் பாதுக்கக்கப்பட்ட உயிரினமாக கருதப்படுகின்றன.

அவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, சில விவசாயிகள் தவளைகளை பண்ணைகளில் வளர்க்க முயன்று வருகிறார்கள். ஆனால், அது எளிதானதல்ல.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தவளைப் பண்ணை ஒன்றைத் துவக்கிய Patrice Francois (56), இன்னமும் அதிலிருந்து லாபம் பார்க்கவில்லையாம்.

தனது பண்ணையில் 100,000 தவளைகளை வளர்த்துவருகிறார் Francois. ஆனால், அவற்றை இனப்பெருக்கம்செய்வதிலிருந்து, பெரிய தவளைகள் சிறியவைகளை கொன்றுவிடாமல் பாதுகாத்து, ஒரு தவளையின் கால்களை உணவுக்கு தயாராகும் அளவுக்கு கொண்டு வரவேண்டுமானால், தவளை 50 முதல் 100 கிராம் அளவுக்கு எடை வரும்வரை வளரவேண்டும்.

அதற்கு கிட்டத்தட்ட ஓராண்டு வரை ஆகுமாம். இருந்தாலும், உள்ளூரிலேயே தவளைக்கால்களை பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் Francois போன்ற ஒரு சில விவசாயிகள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்