மாணவனுக்காக கணவனை பிரிந்த ஆசிரியை... கணவர் தனிமையாகவே உயிரிழந்ததாக வெளியான செய்தி: இது யார் கதை புரிகிறதா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தன்னிடம் பயின்ற மாணவனுக்காக ஒரு பெண் தனது கணவனையே விட்டுப் பிரிந்தார்... அதற்குப்பின் தனிமையிலேயே வாழ்ந்த அந்த கணவர், தனிமையிலேயே உயிரிழந்த செய்தி ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் தெரியவந்துள்ளது.

அந்த மாணவர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். மேக்ரானுக்கு 15 வயது இருக்கும்போது தனது ஆசிரியையான பிரிஜிட்டுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

பிரிஜிட்டுக்கு அப்போது வயது 40! 1974ஆம் ஆண்டு ஆண்ட்ரே லூயிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு, அவருக்கு டிபைன், செபாஸ்டியன் மற்றும் லாரன்ஸ் என்னும் மூன்று குழந்தைகளுக்கு தாயானபிறகு மேக்ரானுடன் பழக்கம் ஏற்பட்டதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட, கணவனை பிரிந்து மேக்ரான் வாழ்ந்த பாரீஸுக்கே வந்துவிட்டாராம் பிரிஜிட்.

அப்போதிலிருந்தே தனிமரமாகிவிட்ட ஆண்ட்ரே, மரணம் வரை தனிமையாகத்தான் இருந்திருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆண்ட்ரே உயிரிழந்த செய்தியே இப்போதுதான் வெளியே வந்திருக்கிறது.

முன்னாள் கணவர் இறுதிச்சடங்கிற்கு பிரிஜிட்டும் அவரது இந்நாள் கணவரான மேக்ரானும் சென்றார்களா என்பது குறித்த தகவல்களும் இல்லை.

அப்பா எப்போதுமே தனிமையாகவே இருக்க விரும்பினார், அவர் ஆசைப்பட்டது போலவே, ரகசியமாகவே, தனிமையாகவே அவரை டிசம்பர் 24 அன்று அடக்கம் செய்துவிட்டேன் என்கிறார் அவரது மகள் டிபைன் (Tiphaine Auzière 36).

2007இல் திருமணம் செய்துகொண்ட மேக்ரானுக்கும் பிரிஜிட்டுக்கும் குழந்தைகள் இல்லை, ஆனால், பிரிஜிட்டுக்கும் ஆண்ட்ரேக்கும் பிறந்த பிள்ளைகள் இப்போது மேக்ரானை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆண்ட்ரேயோ தனிமையாகவே வாழ்ந்து தனிமையாகவே மரணமடைந்திருக்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்