பிரான்சில் பயங்கரம்! இலங்கையர்கள் 5 பேர் பலி: வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் இன்று காலை இளைஞன் ஒருவன் படுகாயங்களுடன், அங்கிருக்கும் கடை ஒன்றில் இருக்கும் நபரிடம் என்னுடைய மாமா வீட்டில் இருக்கும் அனைவரையும் கத்தி மற்றும் சுத்தியலால் கொடூரமாக தாக்கிவிட்டார், உதவும் படி கேட்டுள்ளார்.

இதையடுத்து இது குறித்த தகவல் உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த பொலிசார், சம்பவம் நடந்த வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, வீட்டின் உள்ளே ஐந்து பேர் உயிரிழந்த நிலையிலும், 5 பேர் சுயநினைவுற்ற நிலையிலும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் சுயநினைவுற்ற கிடந்தவர்களை உடனடியாக மீட்ட பொலிசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், உயிரிழந்தவர்கள் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.

குற்றவாளி படுகாயங்களுடன் Beaujon மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இது குடும்ப பிரச்சனை காரணமாக நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்