நாகோர்னோ-கராபாக் பிரச்சினையில் துருக்கியின் செயல் ஆபத்தானது: பிரான்ஸ் ஜனாதிபதி கடும் விமர்சனம்

Report Print Basu in பிரான்ஸ்

துருக்கியின் ‘போர்க்குணமிக்க’ தூண்டக்கூடிய பேச்சு அஜர்பைஜானை நாகோர்னோ-கராபாக்கை மீண்டும் கைப்பற்ற ஊக்குவிப்பதாகவும் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.

அஜர்பைஜானுக்குள் பிரிந்த பகுதியான நாகோர்னோ-கராபாக் ஆர்மீனிய இனத்தினரால் நிர்வாகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் மீது ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை கடுமையான சண்டை வெடித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

துருக்கி அஜர்பைஜானின் நட்பு நாடு, அதனுடன் இன மற்றும் கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கிறது.

இந்நிலையில், அஜர்பைஜான் விஷயங்களை தனது கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது என்றும், துருக்கி தொடர்ந்து அஜர்பைஜானுடன் நிற்கும் என்றும் திங்களன்று துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கூறினார்.

அஜர்பைஜானுக்கு ஆதரவான துருக்கியின் அரசியல் அறிவிப்புகளை நான் கவனித்துள்ளேன், அவை சிந்திக்க முடியாதவை மற்றும் ஆபத்தானவை என்று நான் கருதுகிறேன் என்று மக்ரோன் கூறினார்.

துருக்கியின் ‘போர்க்குணமிக்க’ தூண்டக்கூடிய பேச்சு அஜர்பைஜானை நாகோர்னோ-கராபாக்கை மீண்டும் கைப்பற்ற ஊக்குவிப்பதாகவும், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று மக்ரோன் மேலும் கூறினார்.

ஆனால் இந்த கட்டத்தில் நாகோர்னோ-கராபாக் பிரச்சினையில் துருக்கிக்கு நேரடி ஈடுபாடு இருக்கிறது என கூற என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை, உண்மைகள் நிறுவப்படும் வரை விவேகத்துடன் இருக்க விரும்புவதாகவும் மக்ரோன் கூறினார்.

நாகோர்னோ-கராபாக் பிரச்சினை குறித்து புதன்கிழமை மாலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் மற்றும் வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கலந்துரையாட உள்ளதாக மக்ரோன் கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்