பாரீஸ் பத்திரிகை அலுவலகம் முன்பு கத்திக்குத்து... 4 பேர் படுகாயம்: சொன்னது போலவே மீண்டும் தாக்குதல் தொடங்கி விட்டதா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் தீவிரவாதிகளால் 12 பேர் கொல்லப்பட்ட பத்திரிகை அலுவலகம் முன்பு மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சார்லி ஹெப்டோ என்னும் பத்திரிகை முகமது நபியை அவமதிக்கும் விதத்தில் கார்ட்டூன் வெளியிட்டதற்காக தீவிரவாதிகள் இருவர் 2015ஆம் ஆண்டு பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து நடத்திய வெறியாட்டத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

உலகையே உலுக்கிய அந்த சம்பவத்தில் ஈடுபட்ட Kouachi சகோதரர்கள் என்று அழைக்கப்படும் Cherif மற்றும் Said Kouachi ஆகியோரும் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

இதற்கிடையில், அவர்களுக்கு உதவியதாக 14 பேர் மீது இம்மாதம் 2ஆம் திகதி மீண்டும் விசாரணை துவக்கப்பட்டது.

வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கியதைக் குறிப்பிடும் வகையில், Charlie Hebdo பத்திரிகை, 2015இல் வெளியிடப்பட்ட அதே சர்ச்சைக்குரிய படங்களை மீண்டும் வெளியிட்டுள்ளது.

இப்போது மறைவிடம் ஒன்றில் அந்த பத்திரிகை நடத்தப்பட்டு வரும் நிலையில், அந்த பத்திரிகை அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு கொலைமிரட்டல் வந்துகொண்டே இருந்தது. Kouachi சகோதரர்கள் தொடங்கிய பணியை முடித்தே தீருவோம் என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்தனர்.

இந்நிலையில், அதே அலுவலகம் முன்பு இன்று யாரோ மர்ம நபர் பட்டாக்கத்திகளால் கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது. அந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயமடைந்த அவர்கள் நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளரகள். அவர்களில் இருவர் உயிருக்கு போராடி வருகிறார்கள்.

சொன்னது போலவே தாக்குதலை தொடங்கிவிட்டாரக்ளா தீவிரவாதிகள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.

அத்துடன், சற்று நேரத்திற்கு முன் தாக்குதல் நடத்தியவர்கள் எந்த நேரமும் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சற்று முன் இரத்தக்காயம் படிந்த உடையுடன் ஒருவர் சிக்கியுள்ளார்.

முதலில் இருவர் தாக்குதல் நடத்தியதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில், இப்போது ஒருவர் மட்டுமே தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. பொலிசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்