குட்டைப்பாவாடை அணிந்து பயணித்த இளம்பெண்ணுக்கு பிரான்சில் நேர்ந்த கதி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மேலாடை இன்றி சூரியக் குளியல் போடுவதில் உலகுக்கே முன்னோடிகள் பிரெஞ்சுப் பெண்கள், அதற்காக புரட்சியே செய்தார்கள் ஒருகாலத்தில், இன்று அதே பிரான்சில் குட்டைப்பாவாடை அணிந்ததற்காக பெண்கள் தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கு துவங்கியுள்ளன.

எலிசபெத் (22) என்ற இளம்பெண் Strasbourg நகரில் புகைபிடித்தவண்ணம் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது மூன்று இளைஞர்கள் அவரைப் பார்த்து சத்தமிட்டதாக தெரிவிக்கிறார் அவர். குட்டைப்பாவாடை அணிந்த அந்த பெண்ணைப் பார் என்று மோசமான வார்த்தை ஒன்றைக் கூறி ஒருவர் சத்தமிட்டிருக்கிறார்.

உடனே தன்னையறியாமல், என்னை மன்னியுங்கள் என்ற வார்த்தைதான் எலிசபெத்தின் வாயில் வந்திருக்கிறது. ஆனால், அதற்குள், வாயை மூடு, நேருக்கு நேர் பார்க்காதே என்று சத்தமிட்டிருக்கிறார்கள் அவர்கள்.

இரண்டு ஆண்கள் அந்த பெண்ணின் கைகளைப் பிடித்துக்கொள்ள, மூன்றாவது ஆண் அவரது முகத்தில் குத்தியுள்ளார்.

எலிசபெத் பொலிசாரிடம் புகாரளித்துள்ள நிலையில், அவர்களை அடையாளம் காண பொலிசார் முயன்று வருகிறார்கள்.

சுமார் 15 பேர் சுற்றி நின்று நடந்ததை வேடிக்கை பார்த்ததாக தெரிவிக்கும் எலிசபெத், யாரும் உதவவோ, பொலிசாரை அழைக்கவோ, தாக்கியவர்கள் தப்பி ஓடும்போது தடுக்கவோ முயற்சிக்கவில்லை என்கிறார்.

பிரான்சில் தான் வளர்ந்த சூழல், இளம்பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறி வருவதாக தெரிவிக்கும் எலிசபெத், அது மிகவும், மோசமானதாக, வன்முறையானதாக, அழுக்கானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கிறார்.

பொலிசார் சம்பவத்தைக் கண்ணல பார்த்தவர்களை சாட்சியமளிக்க முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இதற்கிடையில், தங்கள் 20 வயதுகளிலிருக்கும் இரண்டு இளம்பெண்கள் இந்த வாரம் புதன்கிழமை தாக்கப்பட்டுள்ளார்கள், அவர்களும் குட்டைப்பாவாடை அணிந்ததற்காகத்தான் தாக்கப்பட்டுள்ளார்கள். அந்த சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்