அகதிகளுடன் கடலில் மூழ்கும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறு படகு: பிரெஞ்சு அதிகாரிகள் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மூழ்கிவிடுமோ என திகிலை ஏற்படுத்தும் வகையில் பிரெஞ்சு பிரித்தானிய கடல் எல்லையில் அபாயகரமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு படகிலிருந்த அகதிகளை பிரித்தானியாவிற்குள் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர் பிரெஞ்சு அதிகாரிகள்.

பிரெஞ்சு பிரித்தானிய கடல் எல்லைப் பகுதியில் 4 அல்லது 5 பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய ஒரு சிறு ரப்பர் படகில் 16 பேர் அமர்ந்து பிரித்தானியாவை நோக்கி பயணித்துள்ளனர்.

அலை மோதும் கடலில் படகு அத்தனை பேரையும் இழுக்க முடியாமல் இழுத்துச் செல்ல, தண்ணீர் படகுக்குள் ஏற, படகிலிருந்தவர்கள் தண்ணீரை மொண்டு மொண்டு வெளியே ஊற்றிய வண்ணம் பயணித்த அந்த காட்சியைப் பார்க்கும்போது, மனிதராக பிறந்த யாருக்கும் திக்கென்றிருக்கும்.

சரி, விடயத்திற்கு வருவோம், அப்போது அந்த படகைக் கவனித்த பிரெஞ்சு கடலோரக் காவல் படை, அவர்களை பிரித்தானிய எல்லைக்குள் வழி நடத்திவிட்டு திரும்பியிருக்கிறது.

அவர்கள் என்ன செய்யவேண்டுமென்றால், அந்த படகிலிருந்தவர்களை பிரித்தானியாவிற்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கவேண்டும்.

ஆனால், அவர்கள், அந்த அகதிகளை பிரித்தானிய கடற்பகுதிக்குள் தள்ளிவிட்டு விட்டு சென்றுள்ளார்கள்.

அந்த 16 பேரில் பெரும்பாலோர் ஆப்கன் நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களில் இரண்டு குழந்தைகளும் இரண்டு பெண்களும் இருந்துள்ளனர்.

தண்ணீரில் தத்தளித்து, எப்போது மூழ்குமோ என திகிலை ஏற்படுத்திய அந்த படகை, மீன் பிடி படகு ஒன்றிலிருந்தவர்கள் கவனித்து பிரித்தானிய எல்லை காவல் படைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்கள் வந்து அந்த படகிலிருந்தவர்களை மீட்டுள்ளார்கள். இந்த விடயம் பிரித்தானிய அரசியல்வாதிகளை கோபமடையச் செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரான Tim Loughton கூறும்போது, சட்ட விரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயல்வோரை தடுப்பதற்கு பதிலாக, அவர்களை பிரித்தானியாவுக்குள் தள்ளுவதில் பிரெஞ்சு மக்களுக்கு எவ்வளவு சந்தோஷம் என்பதை இந்த சம்பவம் நிரூபிக்கிறது என்கிறார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்