பிரான்சில் திடீரென பரவும் பயங்கர நோய்கள்: நாடு முழுமைக்கும் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

கொசுவால் பயங்கர நோய்கள் பரவத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுமைக்கும் அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பிரான்ஸ் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், வேறு பல பயங்கர நோய்களும் பரவிவருகின்றன.

அதாவது, டெங்கு, சிக்கன்குனியா மற்றும் சிக்கா வைரஸ் ஆகியவை குறித்த எச்சரிக்கை பிரான்ஸ் முழுமைக்கும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்களைப் பரப்பும் Tiger mosquitos என்னும் ஒரு வகை கொசுக்கள் நாட்டில் அதிகரித்துவருவதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

நாட்டின் 58 இடங்களில் இந்த கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்