பிரான்சில் மீண்டும் ஒரு ருத்ரதாண்டவத்தை காட்ட போகும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் தொட்ட உச்சம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்தாயிரம் பேருக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 9843 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒரே நாளில் 71 புதிய தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவின் தொற்று வீதம் நாட்டில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

5096 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 615 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் ள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு Seine-Saint-Denis மாவட்ட மக்கள் பயப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 8-ஆம் திகதி வரை இந்த மாவட்டத்தில் 21 வகுப்பறைகள் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டது. இல் து பிரான்சுக்குள் அதிக கொரோனா தொற்று நிலவு பகுதியாக Seine-Saint-Denis மாவட்டம் உள்ளது.

இதன் காரணமாக, இங்கு வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்