பாரீஸில் வாழும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் வாழும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 2020-2021 கல்வியாண்டில் பொதுப் போக்குவரத்துக்காக செலவிடும் பணம், அவர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும்.

இன்னொரு விதத்தில் கூறினால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு போக்குவரத்துக்கட்டணம் இலவசம்.

ஆனால் இந்த சலுகை பாரீஸுக்கு வெளியிலிருந்து பாரீஸுக்கு வருபவர்களுக்கானது அல்ல என்பது கவனிக்கத்தக்கது.

பாரீஸ் இளைஞர்களுக்கு இலவச பொது போக்குவரத்து அளிப்பதாக, 2020ஆம் ஆண்டு மே மாதம் முனிசிபல் தேர்தலின்போது நகர மேயர் Anne Hidalgo வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த சலுகையால் பாரீஸ்வாசிகளான 135,000 பேர் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்