பிரான்சில் உள்ளூர் ஊரடங்கு நீக்கப்படுமா? கடுமையாக்கப்படுமா? உண்மையை வெளிப்படையாக கூறிய அரசாங்க ஆலோசகர்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் பிராந்தியங்களில் விதிக்கப்பட்டுள்ள உள்ளூர் ஊரடங்கு நீக்கப்படுமா என்பது குறித்து அரசாங்க ஆலோசகர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிக்கு சபைக்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி கூறியதாவது, பிரான்ஸ் பிராந்தியங்களில் உள்ளூர் ஊரடங்கை நிராகரிக்க முடியாது.

உள்ளூர் ஊரடங்கை அதிகாரிகள் தவிர்க்க முயற்சித்தாலும், அங்கு கொரோனா நோய்த்தொற்றுகள் தீவிரமாக பரவி வருகின்றன என தெரிவித்தார்.

உள்ளூர் ஊரடங்கை தவிர்ப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். ஆபத்துள்ள பிராந்தியங்களில் பெரிய கூட்டங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் நாம் ஆராயலாம் என்று பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி கூறினார்.

மார்சேய், போர்டாக்ஸ் மற்றும் பாரிஸ் பகுதி உட்பட சுமார் 20 பெரிய நகரங்களின் நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை 8,577 புதிய உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவானதாக அறிவித்தனர். இது நாட்டில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து பதிவான இரண்டாவது மிக அதிகமான தினசரி வழக்கு எண்ணிக்கையாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்