நாளொன்றிற்கு புகாரளிக்கும் 20,000 பிரான்ஸ் நாட்டவர்கள்: என்ன சொல்கிறது தபால் துறை?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாலில் பார்சல் இப்போது வரும் அப்போது வரும் என மக்கள் காத்திருக்க, நாளொன்றிற்கு சுமார் 20,000 பேருடைய பார்சல்கள் தவறான முகவரியில் டெலிவரி செய்யப்படுவதாக பிரான்சில் புகார் எழுந்துள்ளது.

ஆம், நாளொன்றிற்கு அனுப்பப்படும் பார்சல்களில் 1 சதவிகிதம் இவ்வாறு தவறான முகவரிகளை சென்றடைந்துவிடுவதாக தபால் துறை தெரிவிக்கிறது.

அவர்களைப் பொருத்தவரை அது 1 சதவிகிதமாக இருக்கலாம், ஆனால் ஒரு நாளுக்கு இரண்டு மில்லியன் பார்சல்கள் அனுப்பப்படுகின்றன.

அவற்றில் ஒரு சதவிகிதம் என்பது கொஞ்சம் நஞ்சமல்ல, 20,000 பார்சல்கள்! ஒன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு மக்கள் காத்திருக்க, ட்ராக்கர் உங்கள் பார்சல் டெலிவரி செய்யப்பட்டுவிட்டது என தகவலளிக்க, பார்சலோ வேறு எங்கோ உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள ஒரு தபால் பெட்டியில் திணிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் ஏராளம்.

இனி இந்த தவறுகளை திருத்திக்கொள்ள இருப்பதாக தபால் துறை தெரிவித்துள்ளது. இனி வாடிக்கையாளர்களுக்கு எப்போது அவர்களுடைய பார்சல் வந்து சேரும் என்பது குறித்து மின்னஞ்சல் அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது தபால் துறை.

அத்துடன் வீட்டுக்கு வெளியே பார்சலைக் கொண்டு வந்ததும், மொபைலில் வாடிக்கையாளர்களை அழைத்து தாங்கள் வந்திருப்பதாக கூறி பார்சலை பத்திரமாக ஒப்படைக்கும் திட்டம் ஒன்று, அக்டோபர் 1 முதல் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது தபால் துறை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்