பிரான்ஸ் முழுவதும் பிறப்புறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படும் குதிரைகள்: ஏன்? ஏதற்காக? நீடிக்கும் மர்மம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் குதிரைகள் கொல்லப்பட்டு மற்றும் உறுப்புகள் சிதைக்கப்படுவது தொடர்பில் 150-க்கும் மேற்பட்ட விசாரணைகளை புலனாய்வாளர்கள் முடக்கிவிட்டுள்ளனர் என விவசாய அமைச்சர் ஜூலியன் டெனோர்மாண்டி கூறினார்.

பிரான்ஸ் முழுவதும் காதுகள் துண்டிக்கப்பட்டு, கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு மற்றும் பிறப்புறுப்புகள் சிதைந்த நிலையில் குதிரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏன் குதிரைகள் இவ்வாறு கொல்லப்படுகின்றன என்று தெரியவில்லை என்று பொலிசார் கூறுகிறார்கள்.

சாத்தானிய சடங்கு, கொடூரமான வேட்டை அல்லது இணைய சவால் ஆகியவை காரணமாக குதிரைகள் இவ்வாறு கொல்லப்படலாம் என கூறப்படுகிறது.

விசாரணையின் ஒரு பகுதியாக கிழக்கு பிரான்சில் திங்களன்று கைது செய்யப்பட்ட 50 வயது வேலையற்ற நபர் வழக்கு இன்றி விடுவிக்கப்பட்டார் என்று பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விவசாய அமைச்சரான டெனோர்மாண்டி, முற்றிலும் இக்கொடூரமான கொடுமைச் செயல்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளோம்.

குதிரை உரிமையாளர்களின் அச்சம், கவலைகள், குழப்பம் ஆகியவற்றை நான் கேட்கிறேன், புதன்கிழமை காலை முதல் குதிரை உரிமையாளர்களுக்கு கட்டணமில்லா உதவி எண் வழங்கப்படுகிறது என்று கூறினார்,

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்