மாஸ்க் அணியும்படி வாடிக்கையாளரை கேட்டுக்கொண்ட உணவு பரிமாறுபவருக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
607Shares

பிரான்ஸ் உணவகம் ஒன்றில் நுழைந்த 29 வயது ஆப்கன் நட்டவர் ஒருவர் மாஸ்க் அணியாததால், அவரை மாஸ்க் அணியும்படி கூறியிருக்கிறார் உணவு பரிமாறுபவர் ஒருவர். அளவுக்கு அதிகமாக குடித்திருந்த அந்த ஆப்கன் நாட்டவர் உடனே வெளியேறியுள்ளார்.

அவர் சென்றுவிட்டதாக எண்ணி உணவு பரிமாறுபவர் தன் வேலையைத் தொடரும்போது, திடீரென உள்ளே நுழைந்த அந்த நபர் உணவு பரிமாறுபவரை கத்தியால் நெஞ்சில் குத்தியுள்ளார்.

30 வயதான அந்த உணவு பரிமாறுபவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற பொலிசார் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

அந்த ஆப்கன் நாட்டவர் உணவு பரிமாறுபவரை குத்திவிட்டு வெளியேறிய நிலையில், பொலிசார் அவரைக் கைது செய்து காவலில் அடைத்துள்ளனர்.

மீண்டும் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வருவதையடுத்து தடுமாறி வரும் பிரான்சில், உணவகங்களுக்கு உள்ளே கூட மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்