பிரான்சிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்துங்கள்: அதிரடியாக அறிவித்த ஐரோப்பிய நாடு

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்சில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியுள்ள நிலையில், பெல்ஜியம் பிரான்சை சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்சில் உலக சுகாதார அமைப்பின் தகவல் படி தற்போது வரை 233,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,411 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து முக கவசம் அணிவது கட்டாயம், சமூக இடைவெளி போன்ற பல கட்டுப்பாடுகளை மேக்ரோன் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரண்டாம் அலையாக பிரான்சின் சில பகுதிகளில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது கடந்த 24 மணிநேரத்தில் 5,429 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள், அதாவது கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதிக்கு பின்னர், இரண்டாம் கட்ட அலையாக இந்த தொற்று பதிவாகியுள்ளது. குறிப்பாக தலைநகர் பாரிஸ் மற்றும் இல் து பிரான்ஸில் நோயின் தொற்று தீவிரமாகி வருகிறது.

இதையடுத்து பாரிஸ் நகரத்தினைக் கொரோனா தொற்றின் சிவப்பு மண்டலமாகத் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து, பிரான்சிலிருந்து வருபவர்களை 14 நாள் தனிமைப்படுத்துவதாக அறிவித்த நிலையில் பெல்ஜியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கொரோன பரிசோதனை கட்டாயமாக்கப்படும் என்றும், தனிமைப்படுத்தலும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்