பிரான்சில் வாழும் பிரித்தானியருக்கு பிரான்ஸ் அதிகாரிகளிடமிருந்து வந்த கடிதம்: அதிர்ச்சி அடையச் செய்த அந்த தகவல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
457Shares

பிரான்சில் வாழும் பிரித்தானியர் ஒருவருக்கு பிரான்ஸ் அதிகாரிகளிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.

அந்த கடிதத்தில், நீங்கள் பிரான்சில் வாழ்வதற்கான அனுமதி செப்டம்பரில் காலாவதியாகப்போகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் கண்ட Luke Marlow என்னும் அந்த பிரித்தானியர் அதிர்ச்சியடைந்தார்.

செப்டம்பர் 10, 2020உடன் நீங்கள் பிரான்சில் வாழ்வதற்கான உரிமம் காலாவதியாகிறது, அதன் பின் உங்களுக்கு குடும்ப சலுகைகள் வழங்கப்படாது என்று கூறியது அந்த கடிதம்.

அதே கடிதத்தில்,அவரது titre de séjour வாழிட உரிமம் குறித்தும் கேட்கப்பட்டிருப்பதைக் கண்ட Luke குழப்பமடைந்தார்.

காரணம், தற்போது பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு அந்த வாழிட உரிமம் அவசியமில்லை.

இந்த கடிதம் குறித்து விவரம் கேட்பதற்காக மணிக்கணக்காக CAF அலுவலகத்தில் காவல் கிடந்திருக்கிறார் Luke, ஒரு முறையல்ல, இரண்டு முறை.

மிகுந்த அலைச்சல், நேரம் வீணானதற்குப்பின், அவருக்கு titre de séjour வாழிட உரிமம் அவசியமில்லை என்று கூறியுள்ளனர் அதிகாரிஅக்ள்.

இதேபோல் குழப்பமடைந்தது Luke மட்டுமல்ல, வேறு பலர் இதேபோன்ற குழப்பத்தை சந்தித்துள்ளார்கள்.

பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் சந்திக்கப்போகும் குழப்பங்களுக்கு முன்னோடியாக இந்த பிரச்சினை பார்க்கப்படுகிறது.

பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு உதவும் குழுவில் உள்ள ஒருவர், இந்த பிரச்சினையை தீர்க்க எளிய வழிமுறை ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதாவது பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு titre de séjour வாழிட உரிமம் அவசியமில்லை, அப்படி ஏதாவது படிவத்தில் titre de séjour வாழிட உரிமம் குறித்து கேட்கப்பட்டால்,

அந்த இடத்தில் titre de séjour வாழிட உரிமம் தன்னிடம் இல்லை என்று குறிப்பிட்டு அதற்கு பதிலாக உங்கள் பாஸ்போர்ட் நகலை இணைத்து, பாஸ்போர்ட் நகல் இணைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டால் போதும் என்கிறார் அவர்.

பிரான்ஸ் அரசாங்கமும் பிரித்தானியர்கள் தொடர்ந்து பிரான்சில் வாழ்வதையே தாங்கள் விரும்புவதாக மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவதோடு, அவர்கள் தொடர்ந்து எந்த பிரச்சினையுமின்றி பிரான்சில் வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்