பிரான்ஸ் வங்கி ஒன்றில் நுழைந்து ஆறு பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்த நபர்: பின்னர் நடந்த சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நேற்று மாலை பிரான்சில் வங்கி ஒன்றில் நுழைந்த ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஆறு பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டார்.

வட பிரான்ஸ் நகரமான Le Havreயில் இந்த சம்பவம் நடைபெற்றது. 34 வயதுடைய அந்த நபர் நேற்று மாலை 4.45 மணியளவில் வங்கிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.

ஆறு பேரை அவர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்ட நிலையில், வங்கியை பொலிசார் சுற்றி வளைத்த சில மணி நேரத்திற்குப் பிறகு, நேற்று இரவு அவராகவே பொலிசாரிடம் சரணடைந்தார்.

பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin தெரிவித்துள்ளார்.

அந்த நபர் மன நல பிரச்சினைகள் கொண்டவர் என்பதும், ஏற்கனவே கடத்தல் மற்றும் ஆயுதங்கள் தொடர்பான குற்றப்பின்னணி கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், Le Havreயில் தற்போது மேயராக இருக்கும் முன்னாள் பிரான்ஸ் பிரதமரான Edouard Philippe, பிரச்சினையை தீர்த்து வைத்ததற்காக தங்கள் நகரம் சார்பாக பொலிசாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்