பிரான்ஸ் ஜனாதிபதியிடம் கெஞ்சிய லெபனான் மக்கள்! அவர் கொடுத்த வாக்குறுதி: கமெராவில் சிக்கிய காட்சிகள்

Report Print Santhan in பிரான்ஸ்

வெடி விபத்து காரணமாக நிலைகுலைந்து போயிருக்கும் பெய்ரூட்டிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இன்று விஜயம் செய்த நிலையில், அங்கிருந்தவர்கள் பலரும் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் துறை முகம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து காரணமாக, 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 4000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வீடற்றவர்களாக உள்ளனர்.

இதனால் நிலைகுலைந்து போயிருக்கும் லெபனானுக்கு, பிரித்தானியா,பிரான்ஸ், டென்மார்க், இத்தாலி, சீனா போன்ற நாடுகள் உதவ முன் வந்துள்ளன.

இதில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் ஒரு படி மேலே சென்று, பாதிக்கப்பட்ட பெய்ரூட்டிற்கு இன்று விஜயம் செய்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் அடுத்தடுத்து பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதில், ஒரு வீடியோவில், அவர் மக்களை சந்தித்த போது, ஒருவர் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என்று கெஞ்சுகிறார்.

அதே போன்று மற்றொரு வீடியோவில், பெண் ஒருவர், மேக்ரானிடம், எங்கள் ஊழல் அரசாங்கத்திற்கு பணம் கொடுக்க வேண்டாம் என்று கூறுகிறார்.

அதற்கு மேக்ரான், நாங்கள் அதை செய்யமாட்டோம், நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளிக்கிறார்.

மேலும், அங்கிருக்கும் மக்கள் பலரும் நாட்டின் ஜனாதிபதியான Michel Aoun-ஐ ஒரு தீவிரவாதி என்று கூறி முழக்கமிட்டனர்.

அதுமட்டுமின்றி மக்கள் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும், ஊழல் நிறைந்த அரசை வெளியேற்ற வேண்டும் என்று அவரிடம் கோரியதாக அங்கிருக்கும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நான் அரசுக்கு உதவுவதற்கு வரவில்லை, உங்களுக்காக வந்திருக்கிறேன் என்று கூறியதால், லெபனான் மக்கள் அவரை ஒரு ஹீரோவாக புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்