பெய்ரூட் வெடி விபத்து: உதவி வழங்குவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி செய்துள்ள நம்ப முடியாத செயல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

லெபனான் தலைநகர் பெய்ரூட், வெடி விபத்து சம்பவத்தால் நிலைகுலைந்து போயுள்ள நிலையில், உதவிகள் வழங்குவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நேரடியாகவே பெய்ரூட்டில் சென்று இறங்கிவிட்டார்.

இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி ஆறு மணிக்கே அவர் புறப்பட்டுவிட்டார்.

பெய்ரூட் வந்திறங்கிய மேக்ரானை லெபனானின் ஜனாதிபதி Michel Aoun வரவேற்றார்.

ஜனாதிபதியைப் பொருத்தவரை, உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை லெபனானுக்கு காட்டவேண்டும் என்பதற்காகவே இதை செய்துள்ளார் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சந்திப்பு லெபனானை மீண்டும் கட்டி எழுப்புவதற்காக அஸ்திபாரம் இடும் ஒரு வாய்ப்பும் கூட என்றும் ஜனாதிபதி மாளிகை வட்டாரம் தெரிவித்துள்ளது.

நேற்று, பிரான்ஸ், மூன்று விமானங்களில் மீட்புக் குழுக்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நடமாடும் மருத்துவமனை ஒன்றையும் ஏற்கனவே பெய்ரூட்டுக்கு அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்