இருளில் மூழ்கிய பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம்..! வெளியான நெகிழ வைக்கும் காரணம்

Report Print Basu in பிரான்ஸ்

பெய்ரூட் குண்டுவெடிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் ஒளி விளக்குள் அணைக்கப்பட்டது.

பெய்ரூட் வெடிப்பில் பலியானவர்களுக்கு கிசாவில் உள்ள பிரமிடுகள், துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவுடன் இணைந்தது பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரமும் அஞ்சலி செலுத்தியது.

பெய்ரூட் குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் புதன்கிழமை ஆகஸ்ட் 5ம் திகதி ஒரு மணி நேரம் அதன் விளக்குகளை அணைத்தது.

பாரிஸில் உள்ள சேக்ரே கோயூர் பசிலிக்காவுக்கு வெளியே கூடிய மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ஆகஸ்ட் 5 ஆம் தேதி, கிசாவில் உள்ள பிரமிடுகள், துபாயில் புர்ஜ் கலீஃபா, லெபனானின் கொடியைக் காட்சிப்படுத்தி குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தின.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்