பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு புதிய கொரோனா வழக்குகள் அதிகரிப்பு! தேசிய சுகாதார நிறுவனம் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளிவிற்கு புதன்கிழமை தினசரி கொரோனா வழக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளது.

நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிரான்ஸில் 24 மணி நேரத்தில் 1,695 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது, இது மே 30-ம் திகதிக்குப் பிறகு நாட்டில் பதிவான மிக அதிகமான கொரோனா வழக்குகள் ஆகும்.

மே 30ம் திகதி அன்று பிரான்சில் சுமார் 1,828 கொரோனா வழக்குகள் பதிவானது நினைவுக்கூரத்தக்கது.

எனினும், மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளதாக சுகாதார முகமை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 30,305 ஆக உள்ளது. ஐரோப்பாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் பிரித்தானியா மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்