பிரான்சில் பேராலயத்திற்கு நெருப்பு வைத்தவர் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
745Shares

கடந்த வாரம் பிரெஞ்சு நகரமான நாண்டஸில் முக்கிய பேராலயம் ஒன்றை பேரழிவிற்கு உட்படுத்தியதாக ஒரு ஆலயத் தன்னார்வலர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பேராலயத்தின் வார்டனாக பணிபுரிந்த ருவாண்டன் அகதி சனிக்கிழமை இரவு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

பேராலயத்தின் 17 ஆம் நூற்றாண்டு இசைக்கருவி மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்ணாடி ஜன்னல்களையும் தீக்கிரையாக்கிய சம்பவத்திற்கு எந்த நோக்கமும் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.

குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் தமது கட்சிக்காரர் மன நிம்மதியுடன் இருப்பதாக அந்த ருவாண்டா அகதி சார்பில் வாதிடும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

39 வயதான அந்த அகதியின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. முன்னதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பொலிசாரால் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பேராலயம் தீக்கிரையானதன் முந்தைய நாள் அவருக்கே பேராலயத்தின் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்போது அந்த ருவாண்டன் அகதி குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 150,000 யூரோ அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பாரிஸில் நோட்ரே-டேம் பேராலயம் தீக்கிரையானதன் சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு நாண்டஸில் பேராலயம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்