பிரான்சில் இனி இது இலவசம்.. அதிகரிக்கும் கொரோனாவுக்கு எதிராக போராட அரசாங்கம் முக்கிய உத்தரவு

Report Print Basu in பிரான்ஸ்
586Shares

பிரான்சில் கொரோனா தொற்று விகிதங்கள் அதிகரிக்கும் நிலையில் அரசாங்கம் இலவச கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

ஊரடங்கு நடவடிக்கைகளை நீக்கிய பின்னர் தொற்றுநோய்கள் அதிகரிப்பதை உன்னிப்பாகக் கண்காணிப்பதால், பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கொரோனா சோதனைகளை இலவசமாகக் கிடைக்கச் செய்கிறார்கள்.

சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவுகளின் கீழ், கொரோனா நோய்த்தொற்றுகளைக் கண்டறியும் பி.சி.ஆர் நாசி ஸ்வாப் சோதனைகள் தேவைக்கேற்ப இலவசமாகக் கிடைக்கும்.

வெள்ளியன்று வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் பதிவாகியுள்ள 1,80,528 கொரோனா வழக்குகளில் 30,192 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மாத ஊரடங்கை தொடர்ந்து மே மாதத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதல் புதிய தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 1,000-க்கு மேல் உயர்ந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்