பிரான்சில் பழைய மொபைலை வைத்துக்கொண்டு என்ன செய்வதென தெரியாமல் விழிப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
736Shares

பழைய மொபைலை இனி என்ன செய்வது என்ற கவலை இனி பிரான்சில் யாருக்கும் தேவையில்லை...

அவற்றை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பினால் போதும், அவர்களே அவற்றை மறுசுழற்சி செய்துவிடுவார்கள் அல்லது அவை ஒரு தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படும்.

பிரான்ஸ் முழுவதிலும் சுமார் 50 முதல் 110 மில்லியன் பயன்படுத்தப்பட்ட பழைய போன்கள் வீடுகளில் ட்ராக்களில் அடைந்து கிடக்கின்றன.

அவற்றை கொடுத்தால் அவற்றிலுள்ள தகவல்களுக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளிலேயே வைத்திருக்கிறார்கள்.

Ecosystem, என்னும் தொண்டு நிறுவனம் ஒன்று தற்போது பழைய போன்களை வாங்கிக்கொள்ள முன்வந்துள்ளது.

அவற்றை அந்த தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பினால், அவர்கள் செய்யும் முதல் காரியமே அவற்றிலுள்ள தரவுகளை அழிப்பதுதான்.

அதற்குப் பின்னர் அவை மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்டு அதிக மாசு ஏற்படுத்தும் பாகங்கள் அகற்றப்படும். 83 சதவிகிதம் போன்களும் இப்படித்தான் செய்யப்படும்.

நல்ல நிலையிலிருக்கும் மீதமுள்ள போன்கள் தொண்டு நிறுவன கடைகளில் விற்பனைக்கு வைக்கப்படும்.

எலக்ட்ரானிக் பொருட்கள் நிலங்களை மாசுபடுத்துவதை தடுக்கும் நோக்கில் இந்த தொண்டு நிறுவனம் இந்த சேவையை செய்கிறது.

கொரோனாவுக்குப்பின் மக்கள் வீடுகளை சுத்தம் செய்தபோது தூக்கிப்போடப்பட்ட பொருட்களீல் ஜூன் மாதத்தில் மட்டும் அந்த தொண்டு நிறுவனம் 62,000 டன் பொருட்களை சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்