விமான நிலையங்களில் கொரோனாவுக்கெதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என பிரான்சின் மூத்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மீண்டும் பிரான்சில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ள நிலையில், பிரான்ஸ் விமான நிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பேராசிரியர்கள் Éric Caumes மற்றும் Philippe Juvin ஆகியோர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து பிரான்சுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாததால் நம் நாட்டில் ஆங்காங்கே கொரோனா தொற்று உருவாகி வருகிறது என்று கூறியுள்ள பேராசிரியர் Caumes, அது மட்டுமே பலளிக்கக்கூடிய ஒரே நடவடிக்கையாகும் என்கிறார்.
நம் நாட்டுக்கு வருபவர்களுக்கு நாம் விதிக்கும் கட்டுப்பாடுகளைவிட, மற்ற நாடுகளுக்கு விடுமுறைக்கு செல்லும் மக்களுக்கு அவை அதிக கட்டுப்பாடுகளை விதிக்கின்றன என்கிறார் அவர்.