54 ஆண்டுகளுக்கு முன் மலையில் மோதி நொறுங்கிய விமானத்திலிருந்து கிடைத்துள்ள ஒரு ஆச்சரிய செய்தி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
512Shares

பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள பனிப்பாறை ஒன்று உருகியதில், 54 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் மோதி நொறுங்கிய விமானத்திலிருந்த செய்தித்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Chamonix என்ற பகுதியில் கஃபே நடத்தி வருபவர் Timothée Mottin. அவர் அவ்வப்போது ஆல்ப்ஸ் மலையிலிருக்கும் Mont Blanc என்ற மலைப்பகுதியிலிருக்கும் Bossons glacier என்ற பனிப்பாறை பகுதிக்கு நடந்து செல்வதுண்டு.

அப்படி ஒரு நாள் அவர் செல்லும்போது, ஒரு கட்டு செய்தித்தாள்கள் பனிப்பாறைப்பகுதியில் கிடப்பதைக் கண்டுள்ளார்.

அவற்றை எடுத்துப் பார்த்தபோது, அவை 1966ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20, 21ஆம் திகதி வெளியான இந்திய செய்தித்தாள்கள் என்பது தெரியவர, ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார் அவர்.

அவ்வப்போது பனிப்பாறை உருகும்போது அதில் புதைந்துள்ள ஏதவாது பொருட்கள் கிடைக்கும், ஆனால் 54 ஆண்டுகளுக்கு முன் உள்ள செய்தித்தாள்கள் கிடைப்பது இதுதான் முதல் முறை என்கிறார் Timothée.

அந்த செய்தித் தாள்களில் ஒன்றில், இந்தியாவில் 1966ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயை தோற்கடித்து, இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி தலையங்கமாக கொடுக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

அந்த செய்தித்தாள்கள் சற்று கசங்கியுள்ளது, அவ்வளவுதான், ஆனல் அவற்றைப் படிக்க முடியும் என்கிறார் Timothée.

அந்த செய்தித்தாள்கள், 1966ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 24ஆம் திகதி, கஞ்சன்ஜங்கா என்ற பெயர் கொண்ட ஏர் இந்தியா போயிங் 707 விமானம், ஆல்ப்ஸ் மலையிலுள்ள Mont

Blanc என்ற மலையில் மோதி நொறுங்கியபோது, அதிலிருந்து சிதறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்