நினைப்பதை விட நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது! பிரான்ஸ் மக்களுக்கு அவசர சேவைகளின் தலைவர் எச்சரிக்கை

Report Print Basu in பிரான்ஸ்

கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைந்து வருவதால் பிரான்ஸ் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தலைநகரின் பிரதான மருத்துவமனைகளில் ஒன்றின் தலைவர் எச்சரித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பிய மருத்துவமனை ஜார்ஜஸ்-பாம்பிடோவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது, 35 சதவீதம் நோயாளிகள் வென்டிலேட்டர்களில் உள்ளனர் என்று மருத்துவமனையின் அவசர சேவைகளின் தலைவர் பிலிப் ஜுவின் தெரிவித்தார்.

நினைப்பதை விட நிலைமை மிகவும் மோசமானது. நன்றாக பேசிக்கொண்டே நடக்கும் பலர் இரண்டு மணி நேரம் கழித்து மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுகிறார்கள் என ஜூவின் கூறினார்.

பிரான்சில் வசிப்பவர்களிடம் விதிகளைப் பின்பற்றவும், வைரஸ் பரவுவதைத் தடுக்க வீட்டிலேயே இருக்கவும் ஜூவின் வேண்டுகோள் விடுத்தார்.

பிரான்சில் வசிப்பவர்களிடம் விதிகளைப் பின்பற்றவும், வைரஸ் பரவுவதைத் தடுக்க வீட்டிலேயே இருக்கவும் ஜூவின் வேண்டுகோள் விடுத்தார்.

வெளியே செல்வதை நிறுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். அபாயமான முடிவுகளை எடுக்க வேண்டாம், இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒன்றை நாங்கள் காண்கிறோம் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பாவில் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் பிரான்ஸ் ஒன்றாகும், 14,459 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 562 பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் பிரான்ஸில் 112 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்