பிரித்தானியாவில் சிக்கிய முக்கிய குற்றவாளி ஒருவர் பிரான்சுக்கு நாடுகடத்தப்பட இருக்கிறார்.
Khanh Chan (39) என்பவர், வியட்நாமை மையமாகக் கொண்ட ஒரு குற்ற அமைப்பைச் சேர்ந்தவர்.
வியட்நாமிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோரைக் கடத்துவது இந்த குழுவின் வேலை.
2015க்கும் 2017க்கும் இடையில், மிகவும் மும்முரமாக புலம்பெயர்வோரைக் கடத்தும் நடவடிக்கைகளில் Chan ஈடுபட்டிருந்ததாக் தெரிவித்துள்ள பிரான்ஸ் பொலிசார், அவர் பிடிபடாத நிலையிலேயே பிரான்சில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் Chanக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்க உள்ளன.

அதுவரை Chan பிரித்தானிய சிறையில் இருப்பார். இந்த கடத்தல்காரர்கள், புலம்பெயர்வோரை பிரான்சுக்கு கடத்தி, அங்கிருந்து லொறிகளில் மறைத்து வைத்து பிரித்தானியாவுக்கு கடத்துவது வழக்கம்.
பிரான்சில் குற்றம் சாட்டப்பட்டிருந்த Chan, தலைமறைவாகி வெவ்வேறு நாடுகளில் பதுங்கியிருந்த நிலையில், தற்போது பிரித்தானியாவிலுள்ள கிழக்கு சசெக்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.
