கரடிகளால் கொன்று குவிக்கப்பட்ட ஆடுகள்: கோபமடைந்த உரிமையாளர்களுக்காக மேக்ரான் அளித்துள்ள உறுதி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தங்கள் ஆடுகள் கரடிகளால் கொன்று குவிக்கப்படுவதால் கோபமடைந்திருந்த ஆடுகளின் உரிமையாளர்களை சாந்தப்படுத்தும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதி ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது, 1990களில் காடுகளில் கரடிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவந்ததையடுத்து, அவை அழிந்துபோய்விடக்கூடாது என்பதற்காக பிரான்ஸ் சுலோவேனியாவிலிருந்து கரடிகளை இறக்குமதி செய்தது.

பின்னர் அவை காடுகளுக்குள் விடப்பட்டன. ஆனால், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தால், அவை ஆடு வளர்ப்போரின் ஆடுகளை குறிவைத்தன.

ஆடுகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க தொடங்கின, 100 முதல் 200 தாக்குதல்கள் வரை நடத்தப்பட, ஆடு வளர்ப்போர் கடுங்கோபமடைந்தனர்.

France Bear Ban

ஒரு மலையுச்சியில் ஆடுகளை ஒருவர் மேய்த்துக்கொண்டிருந்தபோது, கரடி ஆடுகளை தாக்க, பயந்துபோன மொத்த ஆட்டு மந்தையும் மலையுச்சியிலிருந்து குதித்ததில், 256 ஆடுகள் இறந்து போயின.

இந்நிலையில், இனி மேல் காடுகளுக்குள் கரடிகள் விடப்படாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உறுதியளித்துள்ளார்.

இந்த செய்தி பிரான்சில் ஆடு வளர்ப்போரை நிம்மதியடையச் செய்துள்ளது.

France Bear Ban

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்