பிரான்ஸ் வேலை நிறுத்தம்: ரயில் கூட்ட நெரிசலில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் நடைபெற்றுவரும் வேலை நிறுத்தங்கள் அவ்வப்போது இயங்கும் ஒன்றிரண்டு ரயில்களில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூட்ட நெரிசல் மிக்க ரயில் ஒன்றில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

Gare de Lyon ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய அந்த இளம்பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட, Villeneuve-Saint-Georges ரயில் நிலையத்தில் அவர் இறக்கிவிடப்பட்டார்.

அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ரயிலில் அவ்வளவு கூட்டம் இருந்த நிலையிலும், சக பயணிகள் மனமுவந்து அந்த பெண்ணுக்கு உதவினர்.

ரயிலில் குழந்தை பிறப்பது இப்போதெல்லாம் சகஜமாகிவிட்ட நிலையில், ரயிலில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிரந்தர சலுகை பயண அட்டையை கொடுப்பதை ரயில்வே துறை வழக்கமாக்கிக்கொண்டுள்ளது.

நமக்கு ஒரு புதிய வாடிக்கையாளர் கிடைத்துள்ளார், அவரை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக்கொள்கிறோம் என்றார் ரயில்வே செய்தி தொடர்பாளர் ஒருவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்