தேர்தல் முடிந்தாயிற்று: பிரான்சிலுள்ள பிரித்தானியர்கள் பிரெக்சிட் குறித்து யோசிக்க வேண்டியதுதான்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானிய தேர்தல் முடிவுகள் பிரெக்சிட்டை மேலும் ஒரு அடி அருகில் கொண்டுவந்துள்ளன எனலாம்.

எனவே பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள், அடுத்த கட்டம் குறித்து யோசிக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது.

மூன்று ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தத்தால், பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் பிரெக்சிட் குறித்து கொஞ்சம் மறந்துபோயிருந்தார்கள் என்று கூட சொல்லலாம்.

ஆனால் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, பிரெக்சிட் நெருங்கிவிட்டது என்றே தோன்றுகிறது. எனவே தற்போது Withdrawal Agreementஉடன் கூடிய பிரெக்சிட்டால் பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு என்ன நேரிடும் என்பதை பார்க்கவேண்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உள்ள உறவுகளை தொடர்ந்து தக்க வைக்கும்Transition period, பிரித்தானியா வெளியேறிய உடன்தானே அமுலுக்கு வந்துவிடும்.

எனவே பிரான்சுக்கு இடம்பெயர விரும்புவோர், இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளாதவர்கள், 2020 டிசம்பர் வரை தற்போதிருக்கும் நெறிமுறைகளின்படியே பிரான்சுக்கு வரலாம்.

அதேபோல் ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலிருந்து மற்றொரு உறுப்பு நாட்டுக்கு இடம்பெயர விரும்பும் பிரித்தானியர்கள் 2020 கடைசி வரை அப்படியே செய்யலாம்.

ஆனால், இது எல்லாமே ஒப்பந்தங்கள் அற்ற பிரெக்சிட் நிறைவேறினால், பிரெக்சிட் நிறைவேறும் அன்றே முடிவுக்கு வந்துவிடும்.

எனவே, நீங்கள் ஏற்கனவே ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு ஒன்றில் சட்டப்பூர்வமாக வசிக்கும் உரிமை உள்ளவர்களாக இருந்தால் நீங்கள் தொடர்ந்து அங்கேயே வசிக்கலாம்.

ஆனால், இந்த நிலை தொடர, நீங்கள் அதிகாரிகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் எளிதில் அவை நடந்துவிடாது.

காரணம், விண்ணப்பிப்பவர்களின் குற்றப்பின்னணி பரிசோதிக்கப்படும். அத்துடன் சட்டப்படி வசிப்பதற்கான தேவைகளை நீங்கள் சந்திக்கிறீர்களா என்பதும் கவனிக்கப்படும்.

தங்களை தாங்களே கவனித்துக்கொள்ளும் வசதி தங்களுக்கு இருக்கிறது என்பதை விண்ணப்பதார்கள் நிரூபிக்க முடியவில்லை என்றால் பிரச்சினைதான்.விண்ணப்பம், transition period முடிவதற்கு ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தற்போதைய கணக்குப்படி, அது 2021, ஜூன் 30 ஆகும். ஆனால், உங்கள் விண்ணப்பம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது.

மேலும், எப்போது பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறதோ அப்போதே தடையில்லா போக்குவரத்து முடிவுக்கு வந்துவிடும்.

அதற்குப்பின் சொந்த தொழில் செய்வோர் எல்லை தாண்டி தொழில் செய்ய முடியாது. நீங்கள் பிரான்சில் வசிக்கும்போது, உள்ளூரைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தீர்கள் என்றால், transition periodக்கு பிறகு, நீங்கள் திருமணம் செய்திருந்தால் கூட பிரித்தானியாவில் உங்களுடன் சேர்ந்து அவர் வாழமுடியாது.

இப்படி பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், இந்த விடயத்தை அப்படியே விட்டு விடாமல், வர்த்தகம் உட்பட பல விடயங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் இரு பக்க நன்மை கருதி அல்லது பரஸ்பர நன்மை கருதி பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்