பிரான்சில் இவர்களைக் கண்டால் கர்ப்பிணிப்பெண்களும் எழுந்து நிற்கவேண்டுமாம்: ஒரு வித்தியாச தகவல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பொதுவாக ரயிலிலோ பேருந்திலோ கர்ப்பிணிப்பெண் ஒருவர் நின்றால், மற்றவர்கள் யாராவது எழுந்து அவருக்கு இருக்கையைக் கொடுப்பது உலகெங்கும் உள்ள விடயம்தான்.

ஆனால் பிரான்சைப் பொருத்தவரை சிலரைக் கண்டால் கர்ப்பிணிப்பெண்களும் எழுந்து அவர்களுக்கு இடம் விடவேண்டுமாம். யார் அவர்கள்?

பல நாடுகளில் உள்ளதுபோலவே பிரான்சிலும் பொதுப் போக்குவரத்து, அதாவது, ரயில், பேருந்து போன்றவற்றில் உட்காருவதற்கு சிலருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே கர்ப்பிணிகள், வயதானவர்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சகஜம்தானே!

ஆனால், பிரான்சில் அந்த விடயத்தில் கொஞ்சம் வித்தியாசம், கொஞ்சமல்ல, நிறைய என்றே சொல்லலாம்.

மெட்ரோ ரயில்களில், உட்காருவதற்கு யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்பதைக் காட்டும் ஒன்பது விடயங்கள் கொண்ட ஒரு பட்டியலே ஒட்டப்பட்டுள்ளது. அதில் முதலில் வருவது, கர்ப்பிணிகள் அல்ல!

எந்த இருக்கையில் யார் அமர்ந்திருந்தாலும், நிற்க இயலாத ஒரு ராணுவ வீரரைக் கண்டால் அவர்களுக்கு எழுந்து இடம் கொடுக்கவேண்டும், அவர்களுக்குதான் பிரான்சில் முதலிடம்.

அடுத்ததாக, கண் பார்வை இல்லாதவர்கள், அவர்களைத் தொடர்ந்து உடற்குறைபாடு கொண்ட, நிற்க இயலாத மக்கள்.

கர்ப்பிணிகளுக்கு ஐந்தாவது இடம்தான். கர்ப்பிணிகளைத் தொடர்ந்து, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தையுடன் இருக்கும் யாரென்றாலும்.

கடைசியாகத்தான் முதியவர்களுக்கு இடம்! முதியவர்கள் என்பவர்கள் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்