பிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்... வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் விமான தளத்திற்கு அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் Marseille-ல் Istres (Bouches-du-Rhone) மாவட்டத்தில் இருக்கும் இராணுவ தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 15:58 மணிக்கு சுமார் ஆயிரம் கிலோ கொண்ட tactical எனும் ட்ரோன் வகையை சேர்ந்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது.

அதிர்ஷ்ட்டவசமாக இந்த விபத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 15 மீற்றர் விசிறி கொண்ட சிறிய விமானம் இது எனவும், உடனடியாக பாதுகாப்பு வலையம் ஏற்படுத்தப்பட்டதால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை எனவும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்