பிரான்ஸில் வங்கி மேலாளர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பை கேட்டு தற்கொலை முயன்ற குற்றவாளி

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸில் 2002ம் ஆண்டு 24 வயது பெண் கடத்தி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

2002ம் ஆண்டு ஜனவரி மாதம் வீடு திரும்பிக்கொண்டிருந்த 24 எலோடி குலிக் கடத்தி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார்

வடக்கு நகரமான பெரோனில் வங்கி மேலாளராக எலோடி பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று அவரது கார் பதுங்கியிருந்து குறிவைக்கப்பட்டது மற்றும் அவசர சேவைகளை அழைக்க முயன்றபோது எலோடி வாகனத்திலிருந்து இழுத்துச் செல்லப்பட்டார்.

2002ம் ஆண்டு ஜனவரி 12ம் திகதி டெர்ட்ரியில் பயன்படுத்தப்படாத விமானநிலையத்தில் எலோடியின் எரிந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவயிடத்திலிருந்து ஆணுறையில் இருந்த விந்தணுக்கள், டி.என்.ஏ செட் மற்றும் கைரேகை ஆகியவற்றை எடுக்கப்பட்டன.

ஆனால், அவை 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதாரமாக பயன்படுத்த முடியவில்லை. எனினும், புதிய தெழில்நுட்பமான குடும்ப டி.என்.ஏ தேடல் பயன்படுத்தப்பட்டது.

இதன் மூலம் 2003ல் கார் விபத்தில் இறந்த பொறியியலாளர் கிராகோரி வையார்ட் கொலையாளிகளில் ஒருவர் என்று முடிவு செய்ய பொலிஸிக்கு வழிவகுத்தது.

வைர்ட் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, வில்லி பார்டன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை பொலிசார் கைது செய்தனர்.

அவசரகால சேவைகளுக்கு எலோடி செய்த 26 வினாடி தொலைபேசி அழைப்போடு வில்லி பார்டன் குரல் ஒப்பிட்டு பார்த்த பின்னர் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கு விசாரணை சோம்மீ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வில்லி பார்டன் அது தனது குரல் இல்லை என்றும், சம்பவயிடத்தில் தனது டி.என்.ஏ இல்லை எனவும் கூறினார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், எலோடி கொலை வழக்கில் வில்லி பார்டன் தான் குற்றவாளி என உறுதிசெய்த நீதிமன்றம், அவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.

twitter

இந்த தீர்ப்பை கேட்டு எலோடியின் தந்தை ஜாக்கி கண்ணீருடன் உடைந்து, குடும்ப உறுப்பினர்களை நீதிமன்றத்தில் கட்டிப்பிடித்தார்.

தீரப்பை அடுத்து குற்றவாளி வில்லி பார்டன் தனது வாயில் மர்ம சாதனத்தை போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது, மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்