பிரெக்சிட்டுக்கு முன்பே பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றிய பிரான்ஸ்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
486Shares

பிரான்ஸ் நாட்டு காலண்டர் ஒன்று, 2020 ஜனவரிக்கு முன்பே பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றிவிட்டது.

ஆம் பிரான்சின் பிரபல கலண்டரான La Poste காலண்டரில் அச்சிடப்பட்டுள்ள உலக வரைபடம் ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியாவைக் காணோம்.

ஆம், இப்போதே 2020க்கான காலண்டர்களை தபால் துறை ஊழியர்கள் விநியோகிக்கத் தொடங்கிவிட்டனர்.

எப்போது பிரெக்சிட், கண்டிப்பாக நிறைவேறுமா, 2020 ஜனவரியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமா என்றெல்லாம் உலகமே கேள்விகளுக்கான பதில்களுக்காக காத்திருக்க, அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இப்போதே உலக வரைபடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை அகற்றிவிட்டது அந்த காலண்டர் நிறுவனம்.

பின் என்ன செய்வது, காலண்டர் அச்சிடப்பட்டபின் பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டால், காலண்டரிலுள்ள உலக வரைபடத்தை மாற்றவா முடியும்?

The almanach shows the UK having left the EU

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்