பிரான்ஸ் முழுவதும் நாளை வேலை நிறுத்தம்: பொலிசார் வெளியிட்டுள்ள உத்தரவு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
633Shares

பிரான்சில் நாளை நடைபெற இருக்கும் வேலை நிறுத்தத்தையொட்டி வன்முறை வெடிக்கலாம் என்பதால், கடைகள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களை மூட பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

நாளை பிரான்ஸ் முழுவதும் வேலை நிறுத்தம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வன்முறை வெடிக்கலாம் என பொலிசார் எதிர்பார்ப்பதால்.

மத்திய பாரீஸின் பல பகுதிகளில் வாகனங்களை நிறுத்த தடை விதித்துள்ள பொலிசார், கடைகள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களையும் மூட உத்தரவிட்டுள்ளனர்.

நாளை டிசம்பர் 5 அன்று, பிரான்ஸ் முழுவதிலும், ரயில்வே ஊழியர்கள், பொதுப்போக்குவரத்து ஊழியர்கள், விமான கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், விமான நிலைய ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், ஆசிரியர்கள், தபால் துறை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், குப்பை அள்ளுவோர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பிரமாண்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

அத்துடன், பாரீஸ் உட்பட பல நகரங்களில் பேரணிகளும் நடத்தப்பட உள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட இயலாத பொலிசார் மற்றும் மருத்துவத்துறையில் உள்ள ஊழியர்களில், நாளை பணியில் இல்லாத ஊழியர்கள் பேரணிகளில் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையில், இந்த வேலை நிறுத்தத்திற்கு மஞ்சள் மேலாடை குழுக்களும் ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள விடயம் பொலிசாருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களின் போராட்டங்களின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்ச்சியின்போது வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

எனவே கடைகள் முதலானவற்றை மூட உத்தரவிட்டுள்ள பொலிசார், இந்த அறிவிப்பு வியாழன் மாலை 7 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்