தரை விரிப்பில் பற்றிய தீ: பிறந்த நாள் வீட்டுக்கு வந்த இருவரை பலி கொண்ட கோரம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் பிறந்த நாள் வீட்டிக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், தரை விரிப்பு ஒன்றில் பற்றிய தீக்கு பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

Saint-Nicolas de Sommaire என்ற இடத்தில் பிறந்த நாள் பார்ட்டி ஒன்றிற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் கூடியுள்ளனர்.

பார்ட்டி முடிந்து அனைவரும் தூங்க சென்றுவிட்ட நிலையில், வீட்டை வெப்பமாக்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த அடுப்பிலிருந்து வெளியான தீ, தரை விரிப்பில் பற்றியுள்ளது.

தரை தளத்தில் படுத்திருந்தவர்கள் தீயை உணர்ந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

ஆனால், முதல் தளத்திலுள்ளவர்களை அவர்கள் எழுப்ப முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

அதற்குள் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் தீயில் சிக்கி 13 மற்றும் 15 வயதுள்ள இருவர் உயிரிழந்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் புகையில் சிக்கி மூச்சுத்திணறிய நான்கு வயது குழந்தை உட்பட பத்து பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரின் மரணம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிறந்த நாள் வீட்டிற்கு வந்தவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்