பிரான்சில் சிதைந்து கிடந்த ஆயிரக்கணக்கான உடல்கள்.. வெளிச்சத்திற்கு வந்த அதிர வைக்கும் சம்பவம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் மனித உடல் தானம் மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதன் நடத்தை குறித்து அரசாங்க விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

பாரிஸ்-டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் உடல் தானங்களுக்கான மையத்தில் ஆயிரக்கணக்கான உடல்கள் சுகாதாரமற்ற நிலையில் சிதைந்து கிடந்தன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை பிரான்ஸ் செய்தித்தாள் எல் எக்ஸ்பிரஸ் முதன் முதலில் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

செய்தித்தாள் ஆய்வறிக்கையின் விசாரணையில், பல உடல்கள் நிர்வாணமாக, சிதைந்து, நகர்படுக்கைளில் குவிந்து கிடந்தது எங்களின் விசாரணையை தூண்டியது.

பல ஆண்டுகளாக ஆராய்ச்சிக்காக தானமாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உடல்கள் மோசமான நிலையில் சேமிக்கப்பட்டு, ஒழுக்கமற்ற நோக்கங்களுக்காக விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சில உடல்கள் எந்த கண்ணியமும் இல்லாமல் ஒன்றுக்கு மேல் ஒன்று அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது. பல உடல்கள் எலிகளால் கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டிருந்தது.

சில உடல்கள் மிகவும் மோசமாக வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டன, அவை எரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. .

சில சந்தர்ப்பங்களில், கார் விபத்து சோதனைகள் போன்ற பொருத்தமற்ற நோக்கங்களுக்காக உடல்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு முழு உடலையும் 900 யூரோக்களுக்கும், ஒரு மூட்டு 400 யூரோக்களுக்கும் விற்க்கப்பட்டிருக்கலாம் என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாரிஸ்-டெஸ்கார்ட்ஸ் பல்கலைக்கழகம் இதுதொடர்பான விசாரணைக்கு ஒப்புக் கொண்டு உடல் தானம் அளித்தவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

பிரான்சின் உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சகம் ஆய்வு செய்யும் வரை இந்த மையம் மூடப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும், விசாரணை உண்மைகளின் யதார்த்தத்தை நிறுவும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்