புலம்பெயர்ந்தோருக்கு எதிராக பிரான்ஸ் அதிரடி.. பாரிஸில் இருந்து அகதிகள் வெளியேற்றம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சின் வடக்கு பாரிஸில் உள்ள சட்டவிரோத அகதிகள் முகாம்களிலிருந்து புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் உள்ளுர பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பதை பிரான்ஸ் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

வடக்கு பாரிஸின் போர்ட்டே டி ஆபர்வில்லியர்ஸில் உள்ள சட்டவிரோத முகாமில் இருந்து 200-300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களை தங்குமிடங்களில் வைப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2016ல் கலீஸில் பெரிய புலம்பெயர்ந்தோர் முகாம் மூடப்பட்டதிலிருந்து, பல அகதிகள் பாரிஸிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

சில மாதங்களுக்குப் பிறகு வெவ்வேறு பகுதிகளில் மீண்டும் எதிர்பாராதவிதமாக கூடுவதைக் கண்ட பின்னரே அதிகாரிகள் சட்டவிரோத முகாம்களை மீண்டும் மீண்டும் அகற்றியுள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கம் சில புலம்பெயர்ந்த கூடார முகாம்களை அகற்றுவதாகவும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒதுக்கீட்டை விதிப்பதாகவும், புதிதாக வந்துள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அவசரகால சுகாதார சேவையை அணுக மறுப்பதாகவும் உறுதியளித்தது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்