பிரான்சில் வரிசையாக இறந்து கிடந்த ஆடுகள்: இறப்புக்கு காரணம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மேற்கு பிரான்சில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஆடுகள் கொல்லப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆடுகளின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பதை அறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன.

இந்நிலையில், Saint-Thomas-de-Conac பகுதியில் அமைந்துள்ள திராட்சைத் தோட்டம் ஒன்றில், ஒரு ஓநாய் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டு அது புகைப்படம் எடுக்கப்பட்டது.

ஆனால் உண்மையிலேயே ஆடுகள் உயிரிழப்புக்கும் இந்த ஓநாய்க்கும் தொடர்புள்ளதா என்பது தெரியவில்லை.

என்றாலும், அந்த ஒநாய்தான் ஆடுகளைக் கொன்றது என்று தெரியவந்தாலும், அது ஒரு சாம்பல் ஓநாய் என்பதால் அதை சுட முடியாது.

காரணம் சாம்பல் ஓநாய்கள் பிரான்சில் பாதுகாக்கப்பட்ட விலங்கினங்களாகும். அவற்றை வேட்டையாடவோ தொந்தரவு செய்யவோ கூடாது.

எனவே யாராவது சாம்பல் ஓநாய்களைக் கண்டால், அல்லது ஆடுகள் தாக்கப்படுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்