பிரான்சில் வேட்டை சீஸனில் இதுவரை தவறுதலாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் வேட்டையாடும் பருவம் பாதி மட்டுமே முடிந்துள்ள நிலையில், அதற்குள் எட்டு உயிர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளன.

இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரான்சின் சுற்றுச்சூழல் அமைச்சர் Emmanuelle Wargon, பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு வேட்டையாடுபவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு வேடையாடும் பருவத்தின்போது 131 விபத்துகள் பதிவாகியுள்ளன. அவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்த ஆண்டு இன்னமும் மூன்று மாதங்கள் வேட்டையாடும் காலம் இருக்கும் நிலையில், இதுவரை எட்டு பேர் தவறுதலாக சுடப்பட்டு பலியாகியுள்ளனர்.

சனிக்கிழமை, Ardennes பகுதியில், வேட்டையாடுபவர்கள் சுட்டதில், 59 வயது நபர் ஒருவர் வயிற்றில் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார்.

இது தொடர்பாக 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்டைக்காலம் துவங்கிய நேரத்தில், Charentes-Maritimeஇல் காளான் பறிக்கச் சென்ற ஒருவர் வேட்டையாடுபவர்களால் சுடப்பட்டார்.

சமீபத்தில் வட பிரான்சில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் வேட்டை நாய்களால் கடித்துக் குதறப்பட்டு கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்