பிரான்ஸ்: 4 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் கடும் எச்சரிக்கை!

Report Print Abisha in பிரான்ஸ்

பிரான்சில் 4 மாவட்டங்களில், இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்று Météo France எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு பிராந்தியாத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. தற்போதும் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், Lozère, Ardèche, Gard மற்றும் Var ஆகிய நான்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் எனவே செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நேரத்தில், காற்றின் வேகம் 80-100 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்