உடல் முழுவதும் காயங்களுடன் நிர்வாணமாக கிடந்த கர்ப்பிணிப்பெண்: கண்ணீருடன் விவரிக்கும் கணவன்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

உடல் முழுவதும் காயங்களுடன் நிர்வாணமாக கிடந்த என் மனைவியை ஏதோ மரக்கட்டை என்று நினைத்தேன் என்று கண்ணீர் வடிக்கிறார் வேட்டை நாய்களால் கடித்துக் குதறப்பட்டுக் கொல்லப்பட்ட பிரெஞ்சுப் பெண்ணின் கணவர்.

பணியிலிருந்த Christophe Lucien Josephக்கு மனைவியிடமிருந்து அழைப்பு வந்தபோது, அவரது குரலில் இருந்த நடுக்கத்திலிருந்தே பிரச்னை என்பதை தெரிந்துகொண்டார்.

அவரது கர்ப்பிணி மனைவியான Elisa Pilarski (29), தான் நாய்களை வெளியே அழைத்துக்கொண்டு வந்திருப்பதாகவும், தன்னை திடீரென பல வேட்டை நாய்கள் சூழ்ந்துகொண்டதாகவும், தனக்கு பயமாக இருப்பதாகவும் கூற, உடனடியாக மனைவி குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்திருக்கிறார் Christophe.

அது பாரீஸுக்கு அருகிலுள்ள Retz என்ற வனப்பகுதி. அங்கு சென்றபோது, முதலில் தன் கண்ணில் சுமார் 30 வேட்டை நாய்கள்தான் பட்டதாக தெரிவிக்கிறார் Christophe.

சற்று தொலைவில் ஒரு நீரோடையில் தனது மனைவியின் உடல் கிடந்ததைக் கண்டுள்ளார் அவர்.

முதலில் ஏதோ மரக்கட்டை என்று எண்ணி அருகில் சென்றதாகவும், பின்னர் அது தனது மனைவியின் உடல் என தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார் அவர். உடல் முழுவதும் கடிபட்ட காயங்களுடன் உடலில் சுத்தமாக துணி இல்லாமல் என் மனைவி கிடந்தாள், அவள் அருகில் அவளது நாய் மட்டுமே இருந்தது என்று கண்ணீர் வடிக்கிறார் Christophe.

உங்கள் மனைவியின் மரணத்துக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டால், நிச்சயம் வேட்டை நாய்கள்தான் என்கிறார் அவர்.

Elisaவின் நாய்கள் உட்பட 62 நாய்களின் DNA மாதிரிகளை சேகரித்துள்ள பொலிசார், அவற்றில் எந்த நாய் Elisaவின் மரணத்துக்கு காரணம் என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்