30 ஆண்டுகளில் 250 பேர் பாலியல் வன்கொடுமை ... அதில் 181 பேர்? பிரான்ஸ் மருத்துவரின் உண்மை முகம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கடந்த 30 ஆண்டுகளில் 250 பேரை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் ஜோல் லீ ஸ்கார்னெக் என்ற 68 வயது நபர் வயிற்று அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்,

கைது செய்யப்பட்ட பின்பு அதே ஆண்டு மே மாதம் அவரின் வீட்டை பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, அதில் குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்கள் இருப்பதை கண்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவரின் வீட்டில் ரகசியமாக டைரி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில் இப்படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தது அவர்களின் பெயர்கள் போன்றவை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்றும் இதன் விசாரணை நடைபெற்றது. அப்போது அரசு வழக்கறிஞர் லாரன்ஸ் ஜோகேவிட்ச், குறித்த நபர் 250 பேரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அதில் 184 புகார் கொடுத்துள்ளதாகவும், அந்த 184 பேரில் 181 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பான இரண்டாம் கட்ட விசாரணையில் 250 பேர் அடையாளம் காணப்பட்டனர். அதில் 209 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததை பற்றி கூறியுள்ளனர்.

அவன்,மருத்துவமனைகளில் சில குழந்தை நோயாளிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதை ஒப்புக் கொண்டதாகவும், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தின் காரணமாக அதைப் பற்றி வெளியில் கூறாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

Saintes-ல் இருக்கும் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை அடுத்தாண்டு விசாரணைக்கு வரும் எனவும், அப்போது பாலியல் வன்கொடுமை மற்றும் அநாகரீகமான வெளிப்பாடு போன்ற குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கொடுக்க கூடும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...